மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 3,062 கொரோனா தடுப்பூசி + "||" + 3062 corona vaccine in a single day

ஒரே நாளில் 3,062 கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 3,062 கொரோனா தடுப்பூசி
கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 3,062 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கிணத்துக்கடவு

கிணததுக்கடவு, சுல்தான்பேட்டை பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 3,062 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

தடுப்பூசி சிறப்பு முகாம்

பொள்ளாச்சி வட்டார பகுதிகளில் கடந்த மாதம் தொடக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டது. பின்னர் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்து உள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்ததால் கிராமங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டு வருகின்றனர். இதனால் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். இதன் காரணமாக கிராம பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நீண்ட வரிசை

இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

சில இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்தும் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச்சென்றனர். சில இடங்களில் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

3,062 பேருக்கு தடுப்பூசி

கிணத்துக்கடவு தாலுகாவில், நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சொலவம்பாளையம், கொண்டம்பட்டி, சேரிபாளையம் ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. 

தடுப்பூசி போடும் பணிகளை நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர்டாக்டர் சித்ரா, டாக்டர்கள் சமீதா, லோகநாதன் முகில்வண்ணன், பிரபு, சிவபிராத்தனா ஆகியோர் கண்காணித்தனர். இந்த முகாம்களில் மொத்தம் 1,912 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் அப்பநாயக்கன்பட்டி, வா.சந்திராபுரம், வதம்பச்சேரி அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 1,150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை பகுதிகளில் மொத்தம் 3 ஆயித்து 62 பேருக்கு நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 3,264 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் 3,264 பேருக்கு கொரோனா