விபத்தில் முதியவர் சாவு


விபத்தில் முதியவர் சாவு
x
தினத்தந்தி 3 July 2021 11:50 PM IST (Updated: 3 July 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே இளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 75). இவர் நேற்று முன்தினம் மாலை மானகிரியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு 8 மணி அளவில் கடை வீதிக்கு நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கணபதி படுகாயம் அடைந்தார். உடனே அவரை காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story