மாவட்டத்தில் 15 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


மாவட்டத்தில் 15 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 July 2021 11:55 PM IST (Updated: 3 July 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 15 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காத்திருந்து போட்டுக் கொண்டனர்.

கரூர்
தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அந்தவகையில் நேற்று கரூர் பகுதியில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கக்கல்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, நாரதகானசபா, ஐஎம்ஏ ஹால், வெண்ணைமலை வட்டார வளர்ச்சி அலுவலகம், கோம்புபாளையம் சமுதாயக்கூடம், அரசு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
குளித்தலை பகுதியில் மருதூர் பஞ்சாயத்து யூனியன் இடைநிலைப்பள்ளி, தோகைமலை பகுதியில் வடசேரி சமுதாயக்கூடம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் பொய்கைபுத்தூர் சமுதாயக்கூடம், தாந்தோணி பகுதியில் சின்னாண்டாங்கோவில், சின்னமூக்கனாங்குறிச்சி இடைநிலைப்பள்ளி, வெள்ளக்கவுண்டன்பட்டி இடைநிலைப்பள்ளி, அரவக்குறிச்சி பகுதியில் தடாகோவில் அரசு தொடக்கப்பள்ளி க.பரமத்தி பகுதியில் பஞ்சாயத்து யூனியன் இடைநிலைப்பள்ளி உள்ளிட்ட 15 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள இனாம் கரூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சத்தியேந்திரன் தலைமையில் சுகாதார செவிலியர் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு, முகாமில் கலந்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பு ஊசி போட்டனர். முகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story