கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 July 2021 6:43 PM GMT (Updated: 3 July 2021 6:43 PM GMT)

பந்தலூர், கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கோத்தகிரி

பந்தலூர், கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கொரோனா தடுப்பூசி

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி, 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. 

இதில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் காலனி, கிருஷ்ணா புதூர், இந்திரா நகர் கிராமங்களில் உள்ள சமுதாய கூடங்களில் 530 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

அரவேனு அரசு உயர்நிலைப்பள்ளி, சேட்டுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், இந்திரா நகர் அங்கன்வாடி மையம் மற்றும் பேரகணி ஒடேன், பாமுடி சமுதாய கூடங்களில் 900 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று ஒரே நாளில் கோத்தகிரி தாலுகாவில் 1,730 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கலெக்டர் உத்தரவு

அய்யன்கொல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று மானூர் அங்கன்வாடி மையத்தில் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 

மேலும் பனஞ்சிறா, மராடி, கப்பாலா, குறிஞ்சி நகர், மண்ணாத்திவயல், முள்ளன்வயல், பந்தப்பிழா பிதிர்காடு, 9-வது மைல் உள்பட பல்வேறு கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.


Next Story