மோட்டார் சைக்கிள் மோதி 5 வயது சிறுமி படுகாயம்
மோட்டார் சைக்கிள் மோதி 5 வயது சிறுமி படுகாயம்
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியை சேர்ந்தவர் கிஷோர்குமார். இவரது மகன் லட்சியா(வயது 5). இந்த நிலையில் கிஷோர்குமாரின் தாயாரான ஓமனா என்பவர் தனது பேத்தியான லட்சியாவுடன் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக முக்கட்டியில் இருந்து பந்தலூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லட்சியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவள் பலத்த காயம் அடைந்தாள். உடனே அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நெலாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story