20 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த குடிநீர்
20 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த குடிநீர்
ஊட்டி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு அணையில் இருந்து குன்னூர் நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று எமரால்டு அருகே கோத்தகண்டி மட்டம் கிராமத்தில் அந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.
மேலும் சுமார் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story