மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு + "||" + Worker dies after falling into well

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
திசையன்விளையில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
திசையன்விளை:
திசையன்விளை மன்னர்ராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சுரேஷை காணவில்லை. பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினார்கள். இந்த நிலையில் நேற்று காலை திசையன்விளை - உடன்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை எதிரில் உள்ள தரைமட்ட கிணற்றில் சுரேஷ் பிணமாக கிடந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் ராஜா தலைமையில் விரைந்து வந்து, கிணற்றில் இறங்கி சுரேஷ் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சுரேஷ் மனைவி விமலாராணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சுரேஷ் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
2. மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
3. மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
கோவில்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.
4. மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
வாசுதேவநல்லூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
5. நெல்லையில் ஓடையில் தவறி விழுந்து வியாபாரி சாவு
நெல்லையில் ஓடையில் தவறி விழுந்து வியாபாரி சாவு