தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திசையன்விளையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 45). சவரத் தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி திரவிய கனிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 1-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் திருப்பதி காயம் அடைந்து இட்டமொழியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின் விசிறியில் திருப்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திரவியகனி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story