வைத்தியலிங்க சுவாமி கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


வைத்தியலிங்க சுவாமி கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2021 1:20 AM IST (Updated: 4 July 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே வைத்தியலிங்க சுவாமி கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் வைத்தியலிங்க சுவாமி கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது, அங்கு இருந்த வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணை தலைவர் வைகுண்ட ராஜா தலைமையிலான வணிகர்கள் வாடகை பிரச்சினை தொடர்பாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 
மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக   உறுதியளித்தார். 
இதை தொடர்ந்து ஆலங்குளம் அருகே சண்முகாபுரத்தில் குளத்தில் மூழ்கி இறந்த 3 குழந்தைகளின் வீட்டிற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்று ஆறுதல் கூறினார். 
மேலும் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ், மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா, கணபதி, நகர செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் உடன் சென்றனர்.

Next Story