சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா சிகிச்சை மையங்களில் 339 படுக்கைகள் காலி
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா சிகிச்சை மையங்களில் 339 படுக்கைகள் காலியாக உள்ளன
சேலம்,
காய்ச்சல் பரிசோதனை
சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று நடைபெற்ற 48 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் மூலம் 3,179 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், அறிகுறிகள் உள்ள 2,646 பேருக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தற்போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 348 நபர்கள் தனியார், அரசு மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சூரமங்கலம் மண்டலத்தில் 1 பகுதிகளும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 11 பகுதிகளும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 8 பகுதிகளும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 3 பகுதிகளும் என மொத்தம் 23 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தேவையான நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
339 படுக்கைகள் காலி
சேலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சித்தா மையத்தில் 35 பேரும், சோனா கல்லூரி தற்காலிக சிகிச்சை மையத்தில் 50 பேரும், பொன்னம்மாப்பேட்டை ஐ.ஐ.எச்.டி. தற்காலிக சிகிச்சை மையத்தில் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 3 தற்காலிக சிகிச்சை மையங்களிலும் 339 படுக்கைகள் காலியாக உள்ளன.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 999 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 ஆயிரத்து 248 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்வதுடன், சமூக இடைவெளியும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story