அன்னமங்கலம் நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம்
அன்னமங்கலம் நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த நெல் கொள்முதல் நிலையம் அன்னமங்கலத்தின் கிழக்கு பகுதியில் எசனை சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பழைய இடத்திற்கு சென்று அலையாமல் புதிதாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தங்களது நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம் என்று நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story