திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட வாலிபர் சிறையில் அடைப்பு
குற்ற வழக்கில் தொடர்புள்ள நிலையில், திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மருவத்தூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சத்தியராஜ் (வயது 34) மீது மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கு உள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது சத்தியராஜ் சம்பவத்தன்று வெளிநாடு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சத்தியராஜின் ஆவணங்களை சோதனையிட்டபோது, அவர் மீது குற்ற வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சத்தியராஜை பிடித்து பெரம்பலூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், சத்தியராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்கள் யாரேனும் வெளிநாடு செல்ல முயற்சித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Related Tags :
Next Story