பெட்ரோல் விலை ரூ.101-ஐ தாண்டியது


பெட்ரோல் விலை ரூ.101-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 4 July 2021 2:26 AM IST (Updated: 4 July 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பெட்ரோல் விலை நேற்று ரூ.101-ஐ தாண்டியது.


திருச்சி, 
திருச்சியில் பெட்ரோல் விலை நேற்று ரூ.101-ஐ தாண்டியது.
தினமும் ஒரு விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தினமும் எகிறியபடியே உள்ளது. இந்த விலை உயர்வு நிர்ணயம் செய்வதை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் திருச்சியில் பெட்ரோல் விலை சதத்தை தாண்டியது. அன்றைய தினம் 100 ரூபாய் 30 காசுகளானது. இதனால், இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் புலம்பி தவித்து வருகிறார்கள். மேலும் காய்கறிகள் விலையும், வாகனங்களின் வாடகை கட்டணமும் கணிசமாக உயர்ந்து உள்ளது.
லிட்டர் 101 ரூபாய் 21 காசு
இந்த நிலையில் திருச்சியில் நேற்று ரிலையன்ஸ் நிறுவனம் 1 லிட்டர் பெட்ரோல் விலையை 101 ரூபாய் 21 காசுகளாக உயர்த்தி விற்பனை செய்தது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 62 காசுகளாக இருந்தது.

Next Story