மாவட்ட செய்திகள்

மீஞ்சூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் சாவு + "||" + 4 cows killed in power outage near Minsur

மீஞ்சூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் சாவு

மீஞ்சூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் சாவு
மீஞ்சூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 40). இவருக்கு அடுத்த அடுத்த வீட்டில் ஜோதி 54, ஏழுமலை 50 ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மின்கம்பி அறுந்து விழுந்ததில் அவர்கள் 3 பேரின் 3 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிரயாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட காரணி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (50). விவசாயி. நேற்று தர்மலிங்கத்தின் மாடு அதே பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அறுந்து விழுந்த மின் கம்பி அந்த மாட்டின் மீது விழுந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் அந்த மின்சார கம்பி காரணி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் வளர்க்கும் ஆடு மீதும் விழுந்தது. இதில் ஆடு மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்து போனது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.