மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி + "||" + Karate master Kibiraj arrested on sexual harassment charge in Pokcho Act Police Action

பாலியல் புகாரில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி

பாலியல் புகாரில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு - சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி
பாலியல் புகாரில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
பூந்தமல்லி,

சென்னை அண்ணாநகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர்,போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். அப்போது மாணவியை விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின்பேரில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் கெபிராஜை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள், கெபிராஜை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் கெபிராஜ் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது கெபிராஜை போக்சோ சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.