முயல் வேட்டைக்கு சென்ற வாலிபர் மீது துப்பாக்கி சூடு - 3 பேர் கைது


முயல் வேட்டைக்கு சென்ற வாலிபர் மீது துப்பாக்கி சூடு - 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2021 10:09 AM IST (Updated: 4 July 2021 10:09 AM IST)
t-max-icont-min-icon

முயல் வேட்டைக்கு சென்ற வாலிபரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சிறுகரணை பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 25). இவர், முயல் வேட்டைக்காக துப்பாக்கியுடன் சென்றதாக கூறப்படுகிறது. கோட்டைபுஞ்சை அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற 3 பேர் முத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதால் 3 பேரும், முத்துவின் துப்பாக்கியை பறித்து அவரையே சுட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த முத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டை புஞ்சை கிராமத்தை சேர்ந்த மோகன் தாஸ் (23), சதீஷ் (29), மோகன்ராஜ் என்ற அஜித் (23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முத்துவை துப்பாக்கியால் சுட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர். முத்துவிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கியை ஏரியில் வீசியதாக கூறினர்.. ஆனால் போலீசார் தேடிபார்த்தும் அந்த துப்பாக்கி இதுவரை கிடைக்கவில்லை.

Next Story