ஜோலார்பேட்டை ரெயில்வே பணிமனையில் குளம்போல் தேங்கிய மழைநீர்


ஜோலார்பேட்டை ரெயில்வே பணிமனையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
x
தினத்தந்தி 4 July 2021 12:08 PM GMT (Updated: 4 July 2021 12:08 PM GMT)

ஜோலார்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே பணிமனையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில்வே தொழிலாளர்கள் பணி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

ஜோலார்பேட்டை

மேற்கூரை சேதம்

ஜோலார்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின் 1 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

அதேபோல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே பணிமனைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. பணிமனையின் மேற்கூரை ஒரு சில இடங்களில் சேதம் அடைந்ததால் மழை பெய்தபோது நேரிடையாக உள்ேள மழைநீர் கொட்டியது. ஒருசில இடங்களில் மேற்கூரையில் ஓட்டை உடைசலாக இருப்பதால் மழைநீர் உள்ளே ஒழுகி ரெயில்வே பணிமனையின் உள்ளே மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் பணியில் ஈடுபட்ட ெதாழிலாளர்கள் அவதிப்பட்டனர்.

தளவாட எந்திரங்கள்

பணிமனையில் சரக்கு ரெயிலில் பழுதுப் பார்த்தல் மற்றும் ஒருசில பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடிக்கும்ேமல் தளவாட எந்திரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரெயில்வே பணிமனையில் மழைநீர் புகாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ரெயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story