கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டிக்கு கிடைத்த தகவலின்படி திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியாநந்தன் மற்றும் ேபாலீசார் இணைந்து திருவண்ணாமலை சமுத்திரம் காலனியில் கஞ்சா குறித்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கலைவாணி (வயது 52), நீலம்பரி (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் தேனிமலையில் நடத்திய மற்றொரு சோதனையில் அதே பகுதியை சேர்ந்த திவாகர் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story