தூத்துக்குடியில் போலீசாருக்கான இடமாறுதல் கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
340 பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 67 போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் 2-ம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ள போலீசார் 340 பேர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அடங்கிய குழுவினர் போலீசாரின் விருப்பத்தை கேட்டறிந்து பணியிட மாறுதல் வழங்கினர்.
பணியிட மாறுதல்
போலீஸ்நிலையங்களில் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப் பணியிடங்களையும் கணக்கிட்டு போலீசாரின் விருப்பத்துக்கு ஏற்ப பணி மாறுதல் வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
கலந்தாய்வு கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட போலீஸ் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி சங்கரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் உமையொருபாகம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story