சோளிங்கர் அருகே கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


சோளிங்கர் அருகே கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 July 2021 7:07 PM IST (Updated: 4 July 2021 7:07 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த பிரகாஷ் (வயது 26) மற்றும் அவரது அண்ணன் மதிலேஷ் ஆகியோர் வாலாஜாவில் இருந்து அரக்கோணத்துக்கு நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சென்றனர். சோளிங்கர் அருகே போடபாறை அம்பேத்கர் சிலை பகுதியில் செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த 2 பேர் அவர்களை மடக்கி கத்திமுனையில் அவர்களிடம் இருந்து, ரூ.15 ஆயிரம் மற்றும் கவரிங் நகையை பறித்து சென்றனர். 
இதுகுறித்து பிரகாஷ் சோளிங்கர் சோளிங்கர் போலீசில் புகார் அளித்தார். 

இந்த நிலையில் நேற்று காலை பாணாவரம் கூட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண் ராஜ்குமார், தாசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  வேகமாக வந்த இருச்சக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில் அவர்கள் பாண்டியநல்லூர் பகுதியை சேர்ந்த அசோக் (வயது 21) மணிகண்டன் என்ற பாட்டில் மணி (22) என்பதும்,  இருவரும் போடபாறையில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story