திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ரூ.102-ஐ தாண்டியது
திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ரூ.102 ஐ தாண்டியது
திருவண்ணாமலை
நாடு முழுவதும் தற்போது வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பொதுத் துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகி்றது. க்கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கு அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து உள்ளது. இதனால் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பாடுபட்டு வரும் ஏழை, எளிய மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பெட்ரோல் 102 ரூபாய் 8 பைசா மற்றும் 102 ரூபாய் 13 பைசாவிற்கும், டீசல் 95 ரூபாய் 46 பைசா மற்றும் 95 ரூபாய் 54 பைசாவிற்கும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story