கோவில்பட்டியில் விஷம் குடித்த தொழிலாளி சாவு


கோவில்பட்டியில் விஷம் குடித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 July 2021 7:08 PM IST (Updated: 4 July 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விஷம் குடிதத தொழிலாளி இறந்து போனார்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகிலுள்ள மூப்பன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் கருணாநிதி (வயது 35). இவருக்கு மாலாதேவி என்ற மனைவியும், சிவகார்த்தி கேயன் ( 8), நிரஞ்சன் முத்தரசன் ( 3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூரில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். கொரோனா பொது முடக்கத்தில் இருந்து சுமார் ஒன்றரை வருடமாக வேலைக்கு எதுவும் செல்லாமல், கோவில் பட்டியில் உள்ள அவரது வீட்டிலேயே இருந்து வந்தாராம். வேலைக்கும் செல்லாமல் இருந்த அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி கருணாநிதிஅதே பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் அருகே உள்ள ஓடையில் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தாராம். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story