தூத்துக்குடியில் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகர மக்கள் நீதிமய்யம் கட்சி மகளிர் அணி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்ததை கண்டித்து தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர மக்கள் நீதிமய்யம் கட்சி மகளிர் அணி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்ததை கண்டித்து தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மகளிர் அணி சித்ரா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நூதன முறையில் விறகு அடுப்பில் சமையல் செய்தும், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமும் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிவக்குமார், சேகர், நல்லசிவம், கருப்பசாமி, மாரிமுத்து, மூர்த்தி, மகளிர் அணி அருணாதேவி, சுபர்லா, செல்வி, வித்யாலட்சுமி, முருகலட்சுமி, பொன்னரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story