மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2பேர் கைது + "||" + two arrested for selling cannabis in thoothukudi

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை குமார் (வயது 22). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் விரைந்து சென்று சின்னத்துரை குமாரை கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
இதே போன்று தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் செல்வம் (52). பெயிண்டர். இவர் எட்டயபுரம் ரோட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் விரைந்து சென்று செல்வத்தை கைது செய்தார். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.