மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் மீனவர் உள்பட 2பேருக்கு கத்திக்குத்து + "||" + two people including a fisherman were stabbed in thoothukudi

தூத்துக்குடியில் மீனவர் உள்பட 2பேருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடியில் மீனவர் உள்பட 2பேருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் மீனவர் உள்பட 2 பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர்வியாஸ்நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). மீனவர். இவர் தனது உறவினர் பழனிவேல்ராஜ் (26) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளிலும், அவரது மனைவி மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் ராஜபாளையம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற தூத்துக்குடி மேலஅலங்காரத்தட்டை சேர்ந்த செல்வபூபதி (26), ஹரிபிரசாத் (22), ரிஷிகபூர் (25), அருண்சந்தோஷ் (24) மற்றும் 2 பேர் சேர்ந்து தங்கராஜின் மனைவியை கேலி செய்தார்களாம். இதனை அறிந்த தங்கராஜ், பழனிவேல்ராஜ் ஆகியோர் சத்தம் போட்டு உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் சேர்ந்து தங்கராஜ், பழனிவேல்ராஜ் ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தி உள்ளனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.