மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி + "||" + 3 people including women were killed in the corona

கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி

கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் என்.எஸ். நகரை சேர்ந்த 57 வயது பெண், இ.பி.காலனியை சேர்ந்த 58 வயது பெண், நத்தம் தாலுகாவை சேர்ந்த 47 வயது ஆண் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் கொரோனா இறப்பு எண்ணிக்கை 598 ஆக உயர்ந்தது.
மேலும் பாதிப்பு எண்ணிக்கையும் 50-க்கு கீழ் தான் இருந்தது. அதன்படி 6 பெண்கள் உள்பட மேலும் 35 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 712 ஆக உயர்ந்தது. அதேநேரம் 19 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.