தங்கம்மாள் ஓடை தூர்வாரப்படுமா?
தங்கம்மாள் ஓடை தூர்வாரப்படுமா?
உடுமலை:
உடுமலை நகராட்சி பகுதியின் மேற்கு பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது. இந்த ஓடையின் 2 புறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. உடுமலை நகரை ஒட்டியுள்ள ஒட்டுக்குளம் நிறைந்தால் உபரி நீர் இந்த ஓடையில்தான் திறந்து விடப்படும். இந்த ஓடையில் கழிவுநீரும் செல்லும். தற்போது இந்த ஓடையின் கரைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. ஓடையில், பழுதடைந்த கரையின் கட்டுமான பொருட்களின் கழிவுகள், மண், கழிவு பொருட்கள், குப்பைகள் ஆகியவை ஆங்காங்கு கிடக்கின்றன. அத்துடன் செடிகள் வளர்ந்து புதர்போன்று உள்ளது. அதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஓடையில் ஆங்காங்கு பள்ளமான இடங்களில் தேங்கி நிற்கிறது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு தொல்லை அதிகரித்துள்ளது. அதனால் தங்கம்மாள் ஓடையை, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அகலம் மற்றும் ஆழத்திற்கு தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story