சேவூர் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது
சேவூர் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது
சேவூர்
சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் கவுஸ் நகர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு, தனிப்பிரிவு போலீஸ் வெள்ளியங்கிரி உள்பட போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முறியாண்டம்பாளையம் கவுஸ் நகரை சேர்ந்த சரவணன் (வயது 32) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் சோதனை செய்தபோது 2 லிட்டர் சாராயம், 15 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த சாராயம் மற்றும் சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சரவணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story