மாவட்ட செய்திகள்

கீழ்வேளூர் அருகே மாடு திருடியவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு + "||" + cow theft

கீழ்வேளூர் அருகே மாடு திருடியவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு

கீழ்வேளூர் அருகே மாடு திருடியவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
மாடு திருடியவர் கைது செய்யப்பட்டார்
சிக்கல்:-
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள அண்டக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது36). விவசாயி. இவர் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த மாடுகள் மேய சென்றிருந்தபோது ஒரு மாடு மட்டும் காணவில்லை. அந்த மாட்டை சிலர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வலிவலம் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 75.அனக்குடியை சேர்ந்த பாண்டியன் (26) உள்பட 3 பேர் மாட்டை திருடி புதுக்கோட்டை மாவட்டம் நெய்வேலி கிராமத்தில் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து, மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். பசுமாடு மீட்கப்பட்டது.