மாவட்ட செய்திகள்

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். + "||" + fish marrkkat

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர்
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தென்னம்பாளையம் சந்தை
திருப்பூர் தென்னம்பாளையத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் மீன், இறைச்சி, காய்கறி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தைக்கு சென்று வாங்கி வருகிறார்கள். கொரோனா பாதிப்பின் காரணமாக சந்தைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கமான நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூரில் மீன், இறைச்சி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பலரும் குவிந்து வருவது வழக்கம்.
மீன் வாங்க குவிந்தனர்
இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கொரோனா ஊரடங்கு தளர்வின் எதிரொலியாலும் தென்னம்பாளையம் சந்தையில் மீன் உள்ளிட்டவைகளை வாங்க ஏராளமானவர்கள் காலையில் இருந்தே குவியத்தொடங்கினர். சிறிது நேரத்தில் கூட்டம் அலைமோதியது. நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் பலரும் குவிந்தனர். பலரும் தங்களுக்கு தேவையானவற்றை முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர்.
இதையொட்டி தென்னம்பாளையம் சந்தை பகுதிகளில் நேற்று காலை அந்த பகுதியில் பலரும் குவிந்ததால், அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல் சந்தைக்கு வந்தவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
விலை விவரம்
தென்னம்பாளையம் சந்தையில் ஒரு கிலோ கட்லா ரூ.140-க்கும், ரோகு ரூ.130-க்கும், நெய்வாளை ரூ.90-க்கும், மத்தி ரூ.220-க்கும், சாளை ரூ.170, சங்கரா ரூ.350-க்கும், ஊளி மீன் ரூ.450-க்கும், கொடுவா ரூ.450. சாலமன் ரூ.600-க்கும், பாறை ரூ.440-க்கும், டேம் பாறை ரூ.120-க்கும், இறால் ரூ.320 முதல் ரூ.420-க்கும், சின்ன நண்டு ரூ.250-க்கும், பெரிய நண்டு ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது.