ராணிப்பேட்டை பகுதிகளில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற 4 பேர் கைது
ராணிப்பேட்டை பகுதிகளில்மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற 4 பேர் கைது
ராணிப்பேட்டை
-
ராணிப்பேட்டை வேலம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 55). இவர் அங்குள்ள இந்திரா நகர் பகுதியில், அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். இவரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராணிப்பேட்டை பிஞ்சி ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த முகுந்தன் (62) என்பவர் ஜெயராம்பேட்டை பகுதியில், அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார். இவரகள் இவரையும் ராணிப்பேட்டை போலிசார் கைது செய்தனர்.
இதேபோல் சிப்காட் அருகில் உள்ள நரசிங்கபுரத்தில், திருவலம் பகுதியை சேர்ந்த கொள்ளாபுரி என்பவர் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவர் அரசு மதுபாட்டில்களை வாங்கி வந்து தனது பெட்டிக்கடையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அவரையும், ராணிப்பேட்டை கெல்லிஸ் ரோடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (48) என்பவர் வாணாபாடி பகுதியில், தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார். இவரையும் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story