தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 4 July 2021 10:51 PM IST (Updated: 4 July 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி:
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விண்ணப்பிக்கலாம்
2021-2022 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் சேர இணையதளம் மூலம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மெட்ரிக் பள்ளிகள், தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கவும், காலியாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகளின் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகளின் படி எல்.கே.ஜி. வகுப்பிற்கு வீட்டு முகவரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பயன் பெறலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இந்த அலுவலகங்களில் பிறப்பு சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை (பெற்றோர்/குழந்தை), குழந்தையின் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  பெற்றோர்கள் இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story