மதுபாட்டில்கள் விற்ற 15 பேர் கைது
மதுபாட்டில்கள் விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏரியூர்:
அரூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அரூர் கோட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது70), மகேந்திரன் (48), பொம்மிடி வஜ்ஜிரம் (41), கடத்தூர் கேசவன் (45), மகேஷ்குமார் (42), ஏழுமலை (67), தயாநிதி (50), கம்பைநல்லூர் சொக்கன் (45), அரூர் அண்ணாதுரை (58) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 299 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஏரியூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது எம்.தண்டாவை சேர்ந்த பழனிசாமி (40), செல்வராஜ் (38), அஞ்சலி (52), பழனி (45), கூர்காம்பட்டியை சேர்ந்த துர்கா (30), ஏரியூரை சேர்ந்த மகேஸ்வரி (36) ஆகியோர் மதுபாட்டில்களை வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story