சவ ஊர்வலத்தில் வாண வெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் பலி


சவ ஊர்வலத்தில் வாண வெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் பலி
x
தினத்தந்தி 4 July 2021 10:53 PM IST (Updated: 4 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே சவ ஊர்வலத்தில் வாணவெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


சின்னசேலம்

சவ ஊர்வலம்

சின்னசேலம் அடுத்த அனுமனந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி முத்தம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து அடக்கம் செய்வதற்காக இவரது உடலை உறவினர்கள் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர். 
அப்போது அனுமனந்தல் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்க்கும் சன்னியாசி(வயது 35) என்பவர் வாணவெடிகளை தனது இடது பக்க அக்குளுக்குள் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எடுத்து வெடித்துக்கொண்டிருந்தார். 

வாணவெடிகள் வெடித்தன

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு வெடியில் இருந்து பறந்த தீப்பொறியானது சன்னியாசியின் அக்குளுக்குள் இருந்த வாணவெடிகள் மீது விழுந்ததை அடுத்து அனைத்து வெடிகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
வாணவெடிகள் வெடித்ததில் தீக்காயம் அடைந்த சன்னியாசி வலியால் துடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

பரிதாப சாவு

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சன்னியாசி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து அவரது மனைவி சித்ரா(27) கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சவஊர்வலத்தில் வாணவெடிகள் வெடித்து டேங்க் ஆபரேட்டர் பலியான சம்பவம் அனுமந்தல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Next Story