சிவகங்கை, எஸ்.புதூரில் பலத்த மழை


சிவகங்கை, எஸ்.புதூரில் பலத்த மழை
x
தினத்தந்தி 4 July 2021 11:03 PM IST (Updated: 4 July 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, எஸ்.புதூரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

எஸ்.புதூர்,

சிவகங்கை, எஸ்.புதூரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

சிவகங்கையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 3 மணியளவில் திடீரென்று மேகமூட்டத்துடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டுவிட்டு பெய்தது.
இதனால் நகரின் தாழ்வான பகுதிகளான பஸ்நிலையம், அரண்மனை வாசல், காந்திவீதி போன்ற இடங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சிவகங்கை காந்தி வீதி பகுதியில் சாக்கடை நீர்நிரம்பியதால் ரோட்டில் மழைநீருடன் கலந்து சாக்கடை நீரும் ஓடியது. மாலை 5.30 வரை மழை நீடித்தது.

எஸ்.புதூர்

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர், பிரான்பட்டி, தர்மபட்டி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் மாலையில் திடீரென பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையினால் அந்த பகுதியே குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

கல்லல்

கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.மேலும் வெப்பத்தின் தாக்கமும் குறைந்து காணப்படுகிறது. கிணற்றுப் பாசனம் மூலமாக கடலை, காய்கறிகள், சிறுதானியங்கள் பயிரிடுவதற்கு இந்த மழை நல்ல பயன் அளிக்கும்.இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story