நீலகிரியில் புதிய மண் நுண்ணுயிரி கண்டுபிடிப்பு
நீலகிரியில் புதிய அரிய வகையான மண் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
நீலகிரியில் புதிய அரிய வகையான மண் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
புதிய நுண்ணுயிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகம் உள்ளது. இங்கு நுண் உயிரிகள் முதல் வனவிலங்குகள் வரை அதன் உடற்கூறுகள் டி.என்.ஏ. ஆய்வு செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஆராய்ச்சியாளர்கள் நீலகிரியில் உள்ள மண்ணில் இருந்து மிகவும் அரிதான புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இதுவரை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் இந்த மண் பூச்சி வகை தெரிவிக்கப்பட வில்லை. 6 இனங்கள் மட்டுமே உலகம் முழுவதும் பதிவாகி இருந்தது. இவை சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கொரியாவின் உயரமான பகுதிகளில் உள்ளது. இந்த பூச்சி 1 மில்லி மீட்டர் நீளம் உள்ளதோடு, பறக்க முடியாது.
இது ஸ்பிரிங் டெயில்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டதால், இந்த இனத்துக்கு பயோனிச்சியூரஸ் தமிழன்சிஸ் என்று பெயரிடப்பட்டது.
கழிவு பொருட்களை ஊட்ட சத்துக்களாக சிதைத்து மண்ணை மேம்படுத்துகிறது. கல்லூரி வளாகத்தில் நூற்றாண்டு கட்டிடத்திற்கான கட்டுமானத்திற்காக அகற்றப்பட்ட மண் மாதிரிகளில் முதலில் கண்டறியப்பட்டது.
டி.என்.ஏ. மாதிரி
புல்வெளிகள், வெட்டப்படாத மக்கிய மண் மாதிரிகளில் இருந்தது. புதிய இனங்கள் சீனாவில் பெறப்பட்ட ஒத்த மாதிரிகளுடன் அதிக ஒற்றுமையை காட்டுகின்றன.
இந்த இனங்கள் இனப்பெருக்கம் செய்ய குளிர் காலநிலை தேவை. சரியான அடையாளத்தை வெளிப்படுத்த டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. உலகின் பிற பகுதிகளில் பெறப்பட்ட ஒத்த மாதிரிகள் எதுவும் டி.என்.ஏ. செய்யப்படவில்லை. இதுகுறித்த ஆய்வு சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது.
புதிய இனத்தின் ஆண் மற்றும் பெண் மாதிரிகள் எதிர்கால குறிப்புகளுக்காக கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் விலங்கியல் கணக்கெடுப்பில் (ZSI) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை ஏற்றுக்கொண்டு வெளியிடப்பட்டது. முதன்மை எழுத்தாளர் முஹ்சினா துனிசா தனது பி.எச்.டி. படிப்புகளுக்காக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story