கோத்தகிரியில் வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
கோத்தகிரியில் வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக டாஸ்டாக் கடைகள் நேற்று வரை திறக்கவில்லை. இதனால் மாவட்ட பகுதியில் சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்காக தொடர்ந்து போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூக்கல்தொரை பேட்டலாடா கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) என்பவர் தனது வீட்டின் பின்புறம் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
இதேபோல எம்.கைகாட்டி கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் தனது வீட்டின் அருகே ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் 12 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து, அழித்தனர். மேலும் மனோஜ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story