பந்தலூர் அருகே மரம் விழுந்து வீடு சேதம்
பந்தலூர் அருகே மரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்து அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடு, கையுன்னி உள்பட பல பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அப்போது கையுன்னி அருகே காளியோடு ஆதிவாசி காலனியில் ஸ்ரீஜா என்பவரின் வீட்டின் மீது ராட்சத மரம் ஒன்று விழுந்தது.
இதில் வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக சேதம் அடைந்தது. மேலும் மரம் விழுந்ததில் வீட்டில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் அந்த பகுதியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அதிகாரி அபிராமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story