மீன் பண்ணை அமைக்க மானியத்துடன் நிதியுதவி


மீன் பண்ணை அமைக்க மானியத்துடன் நிதியுதவி
x
தினத்தந்தி 4 July 2021 11:23 PM IST (Updated: 4 July 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மீன்பண்ணை அமைக்க மானியத்துடன் நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

சிவகங்கை,

மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயோப்ளாக் மீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், புதிய மீன்வளர்ப்பு பண்ணை அமைத்தல், புதிய நன்னீர் மீன்குஞ்சு பொறிப்பகம் அமைத்தல், நன்னீர் கூட்டுமீன் வளர்ப்பு பண்ணை அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைத்தல், சிறிய அளவில் மறுசுழற்சி முறையில் நன்னீர் மீன்பண்ணை அமைத்தல் போன்ற தொழில்கள் மேற்கொள்ளலாம். இந்த தொழில்களுக்கு மீன்வளத்துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் மீன்வளர்ப்பு தொழில் செய்யும் பொதுப்பிரிவினருக்கு முதலீட்டில் 40 சதவீதம் மானியமும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மகளிருக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை பெருமாள்கோவில் தெருவில் செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.



Next Story