டாஸ்மாக் கடைகள் முன் தடுப்புகள் அமைக்கும் பணி


டாஸ்மாக் கடைகள் முன் தடுப்புகள் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 4 July 2021 11:25 PM IST (Updated: 4 July 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே டாஸ்மாக் கடைகள் முன் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெகமம்

நெகமம் அருகே டாஸ்மாக் கடைகள் முன்  தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

டாஸ்மாக் கடைகள் திறப்பு 

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதுபோன்று டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவலாக குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதுடன், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

தடுப்புகள் அமைக்கும் பணி 

எனவே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் மதுபான பிரியர்கள் கூட்டமாக நிற்பதை தடுக்க அனைத்து கடைகளிலும் கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

நெகமம்  ரங்கம்புதூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் தடுப்பு அமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

 மதுபானங்கள் வாங்க வருவபவர்கள் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

முகக்கவசம் கட்டாயம் 

இதுபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, மதுபானங்கள் வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் மதுபானங்கள் வழங்கப்பட மாட்டாது என்றனர். 


Next Story