அ.தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்


அ.தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 4 July 2021 11:59 PM IST (Updated: 4 July 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகு என்பவரின் மகன் சரவணக்குமார் (வயது35). அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ராமநாதபுரம் ஓம்சக்திநகரை சேர்ந்த கார்த்திக். இவர் கடந்த 2 மாதமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு வரவில்லையாம். இதனால் சரவணக்குமார் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் கார்த்திக் தனது நண்பர்களான மனோஜ் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து சரவணக்குமாரை தரக்குறைவாக பேசி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி னார்களாம். மேலும், வீட்டின் சுவற்றினை சேதப்படுத்தியதோடு சரவணக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார்களாம். இதுகுறித்து சரவணக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story