சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்


சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
x
தினத்தந்தி 5 July 2021 12:00 AM IST (Updated: 5 July 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்
தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர் உள்ளது. இந்த எம்.ஜி.ஆர் நகரில் பொது சுகாதார கட்டிடம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதில் பிளாஸ்டிக் பைகள், பழைய துணிகள், வீட்டுக் கழிவுகள், சாக்குகள் உள்ளிட்டவைகள் குவிந்து கிடக்கின்றன. 
மேலும் இந்த குப்பைகள் சாலையின் நடுப்பகுதிவரை கொட்டப்பட்டு, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு குவிந்து கிடக்கின்றன. மேலும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story