கடையில் 2 லட்சம் கேமரா திருட்டு
கடையில் 2 லட்சம் கேமரா திருட்டு
கோவை
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் கேமராக்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. அங்கு ஊழியர் பாலசுப்பிரமணியம் என்பவர் பணியில் இருந்தார்.
அப்போது கடைக்கு வந்த மர்ம நபர், பாலசுப்பிர மணியமிடம் கேமரா வாங்க வந்துள்ளதாக கூறியுள்ளார். உடனே அவரும் ஒவ்வொரு மாடலாக எடுத்து காண்பித்தார்.
அதில் ஒரு மாடல் கேமராவை தேர்வு செய்த அந்த நபர் கடைக்கு வெளியே சென்று வீடியோ எடுத்து பார்க்கலாமா? என்று கேட்டுள் ளார்.
அதற்கு பாலசுப்பிரமணியம் சம்மதம் தெரிவித்துள்ளார். உடனே வெளியே சென்ற மர்ம நபர், வீடியோ எடுப்பது போல் பாவனை செய்தார்.
அங்கு வெளியே ஹெல்மெட் அணிந்தபடி தயாராக நின்ற வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டார். திருட்டு போன கேமராவின் மதிப்பு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கேமராவை திருடிய வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story