பெண்ணுக்கு வாளால் வெட்டு


பெண்ணுக்கு வாளால் வெட்டு
x
தினத்தந்தி 5 July 2021 12:34 AM IST (Updated: 5 July 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே கோழி கழிவு கொட்டிய தகராறில் பெண்ணை வாளால் வெட்டிவிட்டு வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே கோழி கழிவு கொட்டிய தகராறில் பெண்ணை வாளால் வெட்டிவிட்டு வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
கோழிகறிக்கடை
பரமக்குடி அருகே உள்ள பாம்பூர்கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலன். இவர் அந்த ஊரின் சாலையில் கோழிகறிக்கடை வைத்துள்ளார். இவர் கோழி கழிவுகளை கால்வாய்க்குள் கொட்டுவதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது புழுதிக்கிராமத்தைச் சேர்ந்த  2 வாலிபர்கள் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். 
அப்போது கோழி கழிவு அவர்கள் மீது விழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் அகிலனை திட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று  புழுதிக்குளம் கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள்  வாளால் அகிலனை சரமாரியாக வெட்டி உள்ளனர். அவர்களிடம் சிக்காமல் அகிலன் தப்பி விட்டார். 
தப்பி ஓட்டம்
இதை பார்த்த அகிலனின் தாயார் முருகேசுவரி  அவர்களை தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர்கள் முருகேசுவரியை வாளால் வெட்டிவெட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து  பாம்பூர் கிராமக்கள் சாலையில் திரண்டனர். 
தகவல் அறிந்ததும் பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய 3 பேரையும் கைது செய்யக்கோரி பாம்பூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மறியல்
பின்னர் அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் 3 பேரையும் கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். அதைத் தொடர்ந்து 3 வாலிபர்களையும் தேடி போலீசார் புளியங்குளம் கிராமத்திற்கு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story