ஊருக்குள் குரங்கு தொல்லை; மக்கள் அவதி
திசையன்விளை அருகே ஊருக்குள் குரங்கு புகுந்து அச்சுறுத்தி வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளத்தில் கடந்த சில நாட்களாக ஆண் குரங்கு ஒன்று தொல்லை கொடுத்து வருகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் கடந்த சில நாட்களாக குரங்கு ஒன்று தொல்லை கொடுத்து வருகிறது. திடீர் என்று வீட்டிற்குள் புகுந்து அங்குள்ள பொருட்டளை சூறையாடுகிறது. வீட்டின் மேல் கூரை ஓடுகளை பெயர்த்து எடுக்கிறது. இதனால் குழந்தைகள் வெளியில் வர பயப்படுகிறார்கள். வீட்டு தோட்டத்தில் உள்ள பீர்க்கங்காய், எலுமிச்சை, நார்த்தை செடிகளை சேதப்படுத்தி வருகிறது. நாங்கள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியவில்லை. எந்த நேரத்திலும் குரங்கு தாக்கி விடுமோ என்று அச்சப்படுகிறோம். எனவே குரங்கை பிடித்துச் செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Related Tags :
Next Story