திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2021 1:33 AM IST (Updated: 5 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
திராவிட தமிழர் கட்சியினர் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கதிரவன், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் அன்பு, தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட தமிழர் கட்சி கலை இலக்கியப் பிரிவு செயலாளர் ஒண்டிவீரன் முருகேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் மீனா, தமிழர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் லெனின், பூர்வீக தமிழர் கட்சி மகளிர் அணி செயலாளர் இசக்கியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story