சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு


சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 July 2021 1:46 AM IST (Updated: 5 July 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பனந்தாள்:
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
சசிகலா ஆடியோ
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் சூழலில், அரசியலில் இருந்து விலகுவதாக முன்னர் அறிவித்து இருந்த சசிகலா தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கட்சியில் இருந்து நீக்கம் 
இந்தநிலையில்  சசிகலாவிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகளை கட்சி மேலிடம் கட்சியில் இருந்து நீக்கி வருகிறது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்தகநிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள அ.தி.மு.க.பிரமுகர் மகேந்திரன் என்பவர் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். 
போஸ்டரால் பரபரப்பு 
இந்த போஸ்டரில் அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க சசிகலா வரவேண்டும், துரோகத்தை வேரறுத்து களமாட விரைந்து வாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story