2,650 டன் புழுங்கல் அரிசி தஞ்சை வந்தது


2,650 டன் புழுங்கல் அரிசி தஞ்சை வந்தது
x
தினத்தந்தி 4 July 2021 8:21 PM GMT (Updated: 4 July 2021 8:21 PM GMT)

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 2,650 டன் புழுங்கல் அரிசி தஞ்சை வந்தது.

தஞ்சாவூர்:
ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 2,650 டன் புழுங்கல் அரிசி தஞ்சை வந்தது.
மத்திய தொகுப்பு
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதேபோல் தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது வினியோக திட்டத்தின்கீழ் வழங்குவதற்காக அரிசி, கோதுமைகளை தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் அரிசி மற்றும் கோதுமைக்கு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்
2,650டன் புழுங்கல் அரிசி
அதன்படி நேற்று மத்திய தொகுப்பின் கீழ் ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 2,650 டன் புழுங்கல் அரிசி தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தது.
இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.

Next Story