மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.85 அடியாக குறைந்தது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.85 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 5 July 2021 2:03 AM IST (Updated: 5 July 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.85 அடியாக குறைந்தது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை அதிகரித்த நிலையில், அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
அதாவது நேற்றுமுன்தினம் 82.09 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 80.85 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 616 கன அடி தண்ணீர் வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறையுமானால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.

Next Story