பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 30-ந்தேதி இரவில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆனால் அதற்கு பிறகு மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. நேற்றும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு 8 மணியளவில் பெரம்பலூரில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை நேரம், நேரம் ஆக பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. இதே போல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைநீர் சாலையில் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்தபோது மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாயினர்.
Related Tags :
Next Story